தேசிய செய்திகள்

தேர்தலில் போட்டியும் கிடையாது, பிரசாரமும் கிடையாது -சல்மான்கான் விளக்கம் + "||" + Not contesting polls or campaigning for any party, clarifies Salman Khan

தேர்தலில் போட்டியும் கிடையாது, பிரசாரமும் கிடையாது -சல்மான்கான் விளக்கம்

தேர்தலில் போட்டியும் கிடையாது, பிரசாரமும் கிடையாது -சல்மான்கான் விளக்கம்
தேர்தலில் போட்டியும் கிடையாது, யாருக்காகவும் பிரசாரமும் கிடையாது என சல்மான்கான் விளக்கம் அளித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா கோட்டையான இந்தூரில் பிரசாரம் செய்ய சல்மான்கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டிலிருந்து வெற்றிப்பெற்று வருகிறார். அவரை தொகுதி மக்கள் தங்களுடைய சகோதரி என்றே அழைக்கிறார்கள். இந்தூர் சல்மான்கானின் சொந்த ஊராகும். எனவே அவரை பிரசாரத்திற்கு இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்தது.

இதற்கிடையே பிரதமர் மோடி இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்குமாறு சல்மான்கானை கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த சல்மான்கான், “நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம், வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும். வாக்களிக்க தகுதிப்பெற்ற இந்தியர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்ய வேண்டும், அரசை நிர்ணயம் செய்வதில் கலந்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்துகிறேன்,” என குறிப்பிட்டார். இது பா.ஜனதாவிற்காக சல்மான்கான் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற புரளிக்கு வழிவகை செய்தது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், “தேர்தல்களில் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும் கிடையாது,” என சல்மான்கான் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்
வெற்றியோ, தோல்வியோ வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என கட்சி தலைமையிடம் பிரியங்கா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #PriyankaGandhi #Varanasi #Congress #2019Elections
2. பிரதமர் ஆவேன் என்று நான் நினைத்ததே இல்லை : அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த மோடி
பிரதமராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார்.
3. ஈரோடு– பாலக்காடு பயணிகள் ரெயிலை நிறுத்தினால் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை
ஈரோடு–பாலக்காடு பயணிகள் ரெயிலை நிறுத்தினால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. கேரள நாடாளுமன்ற தேர்தலில் ‘காங்கிரஸ், பா.ஜனதா பேராசை, அவர்களுக்கு வீழ்ச்சியை தரும்’ - பினராயி விஜயன் தாக்கு
கேரளாவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் பேராசை, அவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வீழ்ச்சியை தேடித்தரும் என பினராயி விஜயன் சாடினார்.
5. மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி
மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.