தேசிய செய்திகள்

மக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் ஹேம மாலினி + "||" + People wanted me to contest from here again Hema Malini

மக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் ஹேம மாலினி

மக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் ஹேம மாலினி
மக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் என ஹேம மாலினி கூறியுள்ளார்.

பா.ஜனதாவின் மதுரா தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் இந்தி நடிகை ஹேம மாலினி. பா.ஜனதா சார்பில் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பேசுகையில், நான் இங்கு போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அமித்ஷா ஜி, மோடி ஜிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் வளர்ச்சியை கொண்டுவர கடினமாக உழைப்பேன். பிற அரசியல்வாதிகளை போன்று நான் கிடையாது, மக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் பேசுகையில், “கட்சி என் மீது நம்பிக்கையை தெரிவித்துள்ளது. அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவேன். நாக்பூர் மக்கள் கடந்த முறை எனக்கு வாக்களித்தார்கள். என்னுடைய பணியில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்னை மீண்டும் தேர்வு செய்தால் சிறப்பான பணியை செய்வேன்,” என கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது
கோவாவில் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு
பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.
3. முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா
பா.ஜனதா வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
4. "பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" பா.ஜனதாவின் அறிக்கையை கிண்டல் செய்யும் அரசியல் கட்சிகள்
"பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
5. பா.ஜனதாவின் ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது தெலுங்கானா போலீஸ்
தெலுங்கானா பா.ஜனதாவின் 8 கோடி ரூபாயை அம்மாநில போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.