தேசிய செய்திகள்

பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Congress alleges Yeddyurappa paid Rs 1,800 crore to BJP s national leaders

பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலக்கட்டங்களில் பா.ஜனதாவின் மத்திய தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார். கேரவன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு எடியூரப்பா, பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவிற்கும், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பணம் வழங்கியுள்ளார் என சுர்ஜேவாலா கூறியுள்ளார். 

தன்னை பாதுகாவலர் என அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ள ஒவ்வொரு தனிநபரும் பதிலளிக்க வேண்டும். இத்தகவல்கள் அடங்கிய டைரி தொடர்பாக உண்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதனை லோக்பால் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். எடியூரப்பா 2009 காலகட்டங்களில் வழங்கிய தொகையென்றும், டைரியின் ஒவ்வொரு பக்கத்திலும் எடியூரப்பா கையெழுத்திட்டு ஆவணப்படுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், கட்காரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எடியூரப்பா பணம் அளித்துள்ளார் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுர்ஜேவாலா பேசுகையில், “இது உண்மையோ அல்லது பொய்யோ? எடியூரப்பாவின் கையெழுத்து அடங்கிய இந்த டைரி 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறையிடம் உள்ளது. அப்படியானால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஏன் அதை விசாரிக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடையும்: எடியூரப்பா
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடையும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2. முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்
முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
3. கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு
கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
4. காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவரே வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது
ராகுல் காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
5. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.