தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல் + "||" + All BJP leaders are thieves Rahul Gandhi on media report on Yeddyurappa diaries

பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்

பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்
பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

புதுடெல்லி, 


பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது பா.ஜனதா தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார் என வருமான  வரித்துறையில் சிக்கிய டைரியில் தகவல் உள்ளது என பத்திரிக்கை செய்தி வெளியாகியது. மொத்தம் ரூ. 1,800 கோடி சென்றுள்ளது என குறிப்பிடப்பட்ட செய்தியை மையப்படுத்தி, விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. 

ஆனால் எடியூரப்பா, “இது காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியாக்கள்தான், போலியானவை” என பதிலளித்துள்ளார்.

பா.ஜனதா தலைமைக்கு கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘‘பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள். நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்...’’ என்று சாடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் போட்டியிட சாத்வி பிரக்யாவுக்கு தடை கோரிய மனுவை என்ஐஏ கோர்ட்டு தள்ளுபடி செய்தது
தேர்தலில் போட்டியிட சாத்வி பிரக்யாவுக்கு தடை கோரிய மனுவை என்ஐஏ கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
2. மத்தியில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் - அமித்ஷா நம்பிக்கை
மத்தியில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
3. தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி
அகமதாபாத்திற்கு வாக்களிக்க வருகை தந்த பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்
4. இந்தி நடிகர் சன்னி தியோல், பா.ஜனதாவில் சேர்ந்தார்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டி?
இந்தி நடிகர் சன்னி தியோல், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.
5. குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்
குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்.