மாநில செய்திகள்

மக்களவைத் தேர்தல் : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு + "||" + Tamilnadu, Puducherry Congress candidates announce

மக்களவைத் தேர்தல் : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1  தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி -  டாக்டர் ஏ.செல்லகுமார்

திருவள்ளூர்  - டாக்டர் கே.ஜெயக்குமார்

ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்

கரூர் - ஜோதிமணி

திருச்சி - சு.திருநாவுக்கரசர்

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி - ஹெச்.வசந்தகுமார்

தேனி-  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சிவகங்கை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

புதுவை - வைத்தியலிங்கம்

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் அமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார் .
3. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு 1½ லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 54 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.