தேசிய செய்திகள்

மோடி பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே காவலாளி : ராகுல்காந்தி தாக்கு + "||" + Modi For large companies only Watchman Rahul Gandhi's attack

மோடி பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே காவலாளி : ராகுல்காந்தி தாக்கு

மோடி பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே காவலாளி : ராகுல்காந்தி தாக்கு
பீகார் மாநிலம் புர்னியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
புர்னியா, 

எப்படிப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் காவலாளியை வேலைக்கு வைத்திருப்பார்கள்? சாதாரண மக்களின் வீட்டு வாசலில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? பெரும் பணக்காரர்கள் தான் அப்படி செய்வார்கள். சாதாரண மக்களாகிய நீங்கள் உங்கள் வீடுகளை நீங்களே பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.

மோடி எப்போதும் தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்கிறார். ஆனால் நடைமுறையில் அவர் சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களுக்கும், அதன் அதிபர்களின் வீடுகளுக்கும் மட்டுமே காவலாளியாக இருக்கிறார். அவர் சாதாரண மக்களின் பணத்தை திருடி பெரிய நிறுவனங்களின் பணப்பெட்டியில் சேர்க்கிறார். ரபேல் ஒப்பந்தம் மூலம் தனது நண்பர் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார்.

பண மதிப்பு இழப்பின்போது சாதாரண மக்கள் தான் மணிக்கணக்கில் வரிசையில் நின்றார்கள். கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் சுலபமாக தங்கள் பணத்தை மாற்றிவிட்டனர்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பதிலில் திருப்தி இல்லை, மீண்டும் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2. ராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம்
ராகுல் காந்தியை நாய்க்குட்டி என்று கூறிய குஜராத் மந்திரிக்கு அம்மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்தார்.
3. ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
4. ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் -நிதின் கட்கரி
ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
5. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மத்தியில் மோடி ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.