தேசிய செய்திகள்

கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து இரு சிறுவர்கள் காயம் + "||" + Two children injured after bomb stored in Kerala RSS workers house explodes

கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து இரு சிறுவர்கள் காயம்

கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து இரு சிறுவர்கள் காயம்
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து இரு சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

கண்ணூர் மாவட்டம் நாடுவில் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சிபு வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் சிபுவின் மகன் 7 வயது கோகுல், அவருடைய உறவினர் மகன் 12 வயது கஜின்ராஜ் காயம் அடைந்துள்ளனர். பறவைகளை அடைப்பதற்காக கூடு அமைக்க அப்பகுதியில் கிடந்த பொருட்களை அகற்றும் பணி நடைபெற்ற போது குண்டு வெடித்துள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறு சிறுவர்களுக்கும் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பு தகவலின்படி சிபு வீட்டில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. சிபு மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கனவே சிபுவிற்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது. இப்போது குண்டு வெடித்த பின்னர் சிபு தலைமறைவு ஆகிவிட்டார். அவரை கைது செய்யவில்லை என குடியான்மாலா காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து  போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது 3 கிலோ அலுமினியம் பவுடர் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ளனர். அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் அவசர நிலை ஒரு மாதம் நீடிப்பு
இலங்கையில் தற்கொலை தாக்குதலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி, 25 பேர் காயம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சூபி புனித தலம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகினர்.
3. குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்வு செய்தது ஏன்? சிறிசேனா விளக்கம்
குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
4. பின்லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார்
பின்லேடன் படத்துடன் கேரளாவில் கார் ஒன்று சுற்றி திரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் பயங்கர தாக்குதல் : குண்டு வெடிப்பில் 16 வீரர்கள் பலி - பிரதமர் மோடி கடும் கண்டனம்
மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி கமாண்டோ படை வீரர்கள் 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.