தேசிய செய்திகள்

மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் - நவீன் பட்நாயக் + "||" + BJD will play decisive role in govt formation at Centre Naveen Patnaik

மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் - நவீன் பட்நாயக்

மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் - நவீன் பட்நாயக்
மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.


ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. 2000-ம் ஆண்டு முதல்வராக வந்த பட்நாயக் அசைக்கமுடியாத சக்தியாக ஒடிசாவில் ஆட்சி செய்து வருகிறார்.  2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையையும் வீழ்த்தி பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் மண்ணை கவ்வியது. பா.ஜனதா ஒரு தொகுதியில் வெற்றியை தனதாக்கியது. மாநிலத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்து உள்ளது.

இந்த முறையும் பிஜு ஜனதா தளமே வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு வேட்பாளர் ஒதுக்கீட்டிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் பிரசாரத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதல்–மந்திரியுமான நவீன் பட்நாயக் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஒடிசாவில் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார்.

மேலும், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த பா.ஜனதா, அதிகாரத்துக்கு வந்ததும் அதை புறக்கணித்து விட்டதாக நவீன் பட்நாயக் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல்
கடந்த நிதியாண்டில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் சேதங்களை எதிர்க்கொண்ட ஒடிசா, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.4,432 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
3. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் மீது கட்சிக்கொடி : அரசியல் கட்சிகள் கண்டனம்
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மீது கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி
ஒடிசா வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
5. பானி புயல் பாதிப்பு: ஒடிசாவில் பல இடங்களில் மக்கள் ஆர்பாட்டம்
பானி புயல் பாதிப்புகளை விரைவாக செய்யக்கோரி ஒடிசாவில் பல இடங்களில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.