தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் - பிரியங்கா காந்தி + "||" + Chowkidar only works for the rich: Priyanka Gandhi slams PM Modi

பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் - பிரியங்கா காந்தி

பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் - பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் தொடங்கிய நானும் காவலாளிதான் பிரசாரத்தை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்கிறது.  காவலாளி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். ‘‘பணக்காரர்களுக்குத்தான் காவலாளிகள் சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏழை எளியோரைப்பற்றி கவலை கொள்வதே இல்லை’’ என பிரியங்கா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகள் இரவும், பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்குவதற்கு கூட மாநில அரசு பொறுப்பு ஏற்பதில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளனர். இதன் அர்த்தம், கரும்பு விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது. அவர்களது சாப்பாடுக்கு வழியின்றி போகிறது. 

அவர்களின் சுகாதார தேவைகளை கவனிக்க முடிவதில்லை. அவர்களின் அடுத்த சாகுபடி திட்டமும் அப்படியே நின்று விடுகிறது என பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி.யில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரத்து 836 கோடி என தகவல் வெளியாகியது. இதனை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வியை எழுப்பியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியை வார இறுதியில் சந்திப்பேன்: காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பரபரப்பு பேட்டி
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும், பிரதமர் மோடியை வார இறுதியில் பிரான்சில் சந்திப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
2. உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார்; பிரியங்கா காந்தி
அரசுக்கு எதிராக உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார் என பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
3. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நிலாவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 நுழைந்ததையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. 23, 24-ந் தேதிகளில் பிரதமர் மோடி அமீரகத்தில் சுற்றுப்பயணம் - உயரிய விருது வழங்கப்படுகிறது
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவருக்கு அமீரகத்தின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது.
5. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றார்.