மாநில செய்திகள்

தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு + "||" + Karunanidhi did not teach us to speak poorly

தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு

தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு
தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

தேர்தல் நடக்காமல், வாக்கு எண்ணாமல் திமுக வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மறைவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்படும்.

மோடி, அமித்ஷாவிடம் அடகு வைக்கப்படும் பொருளை மீட்க முடியுமா? அதிமுக ஆட்சி கோமா நிலைக்கு சென்றுவிட்டது. தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.

நான் தான் கடவுள் எனக்கூறும் முதல்வர் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளார் வாரிசுகள் என்ற காரணத்தினால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க முடியுமா?  திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதி பெற்றவரா என ஆராயுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.