மாநில செய்திகள்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டி + "||" + MDMK Candidate Ganesamoorthi Competition in the Udayasooran symbol

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டி
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
ஈரோடு, 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் வேட்பாளராக ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.