தேசிய செய்திகள்

கடந்த 2014 ஆண்டை விட 2019 தேர்தலில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் குறைவு + "||" + In the 2014 elections in 2014 more than the year 2014 The first time voter turnout is low

கடந்த 2014 ஆண்டை விட 2019 தேர்தலில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் குறைவு

கடந்த 2014 ஆண்டை விட 2019 தேர்தலில்  முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள்  குறைவு
கடந்த 2014 ஆண்டை விட 2019 தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் 30 சதவீதம் குறைந்து உள்ளனர்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.   மே - 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதில் தொடக்க கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான பட்டியலை இரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

16 வது மக்களவை 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி காலாவதியாகிறது . 15-வது மக்களவை  2014 மே 31 ஆம் தேதி காலாவதியானது. 2014 ல் 9 கட்டங்களாக நடந்ததுடன் ஒப்பிடும் போது தற்போது 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

மொத்த வாக்காளர்களின் அடிப்படையில் இது 2014-ல் 814.5 மில்லியனிலிருந்து 2019-ல் 900 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 10.5 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இருப்பினும், 18-19 வயதில் உள்ள வாக்காளர்கள் அல்லது முதல் முறையாக  வாக்களிக்கும் வாக்காளர்கள் 2014 ல் 23 மில்லியனாக  இருந்து தற்போது 2019-ல் 15 மில்லியனாக குறைந்து உள்ளது. இது 30 சதவீதம் குறைவு ஆகும். மற்ற பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது. ஆந்திராவில் மட்டுமே புதிதாக சேர்ந்த வாக்காளர்களின்  எண்ணிக்கை  0.3 சதவீதமாக குறைந்து உள்ளது. பீகாரில் 21 சதவீதம் கடந்த முறையை விட அதிக வாக்காளர்கள் சேர்ந்து உள்ளனர்.

2014 உடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு வாக்காளர்களின் பதிவுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது என்றாலும், உலகம் முழுவதும் வெளிநாட்டு வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது  குறைவாகவே உள்ளது.

சேவை வாக்காளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம்  அதிகரித்துள்ளது.  இது 2014 ஆம் ஆண்டில் 13.28 லட்சமாக  இருந்தது. அது 2019 ஆம் ஆண்டில் 16. 77 லட்சமாக உயர்ந்து உள்ளது.

2019 ஆம் ஆண்டில்  தேர்தல் மையம்  கடந்த 2014யை விட  11.6 சதவீதம்  அதிகரித்து உள்ளது.

இந்த முறை, மூன்று வெவ்வேறு மாநிலங்களில் 7 கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.  பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.  உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவற்றில் 2014-ல் 6 கட்டமாக தேர்தல் நடந்தது.

22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில்  ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் 2014 ஆம் ஆண்டிலும் நடைபெற்றது.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள  அனந்த்நாக்  மக்களவை தொகுதியில் 3 வெவ்வேறு கட்டங்களில் (3 வது, 4 வது மற்றும் 5 வது கட்டங்களில்) தேர்தல் நடைபெறுகிறது.  அனந்தநாக்கில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் 3 வெவ்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். இது ஒரு அரிய நிகழ்வு ஆகும்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா தேர்தல்களை 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 நாட்களுக்கு முன்னரே நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ
அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
2. மோடியை போல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் - மாயாவதி
மோடியை போல் அல்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் என மாயாவதி கூறினார்.
3. “ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
4. 5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.
5. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.