தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி + "||" + TMC forms alliance with Kamal Haasans party for LS polls

திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி

திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது.
கொல்கத்தா,

மம்தா பானர்ஜியை நேற்று கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், அதன் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் அவர் அறிவித்தார்.


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். கொல்கத்தா நாபன்னாவில் உள்ள தலைமை செயலகத்தில் கமல்ஹாசன், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பு பற்றி கமல்ஹாசன் கூறும்போது இது வழக்கமான அரசியல் என்றார். ஆனாலும் என்னென்ன விஷயங்கள் பேசினார்கள் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னர் தலைமை செயலகத்திற்கு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. நான் மாநில அளவில் ஒரு சிறிய கட்சி வைத்துள்ளேன். மம்தா பானர்ஜியின் வாழ்த்துகளை பெறுவதற்காக வந்தேன்.

மக்கள் நீதி மய்யம் அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இந்த உறவு எதிர்காலத்திலும் பரிணமிக்கும் என நாங்கள் நம்புகிறோம். அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மம்தா பானர்ஜி கூறும்போது, “அந்தமான் தொகுதியில் கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்” என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
2. திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் : அறிக்கையை கோரியது மத்திய அரசு
திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது.
3. நாடாளுமன்ற தேர்தல்; திரிணாமுல் காங்கிரசின் இசை வீடியோ வெளியீடு
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மக்களவை தேர்தலை முன்னிட்டு இசை வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
4. ரெயில் டிக்கெட்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்
ரெயில் டிக்கெட்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தற்கொலைக்கு மம்தாவே காரணம் என ஐ.பி.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு; அடிப்படையற்றது என திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியே தனது தற்கொலைக்கு காரணம் என ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கூறியது அடிப்படையற்றது என திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து உள்ளது.