தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை -அருண் ஜெட்லி விமர்சனம் + "||" + Bluff announcement Arun Jaitley on Congresss Rs 12K income poll promise

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை -அருண் ஜெட்லி விமர்சனம்

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை -அருண் ஜெட்லி விமர்சனம்
ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 என்ற காங்கிரஸ் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என்று அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி இத்திட்டம் தொடர்பாக பேசுகையில், 5 கோடி குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். அந்த குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர், இத்திட்டத்தால் நேரடியாக பலன் பெறுவார்கள். இந்த திட்டத்தால் ஏற்படும் நிதி தாக்கத்தை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்து விட்டது. கடந்த சில மாதங்களாக எல்லா கணக்கீடுகளையும் போட்டுப் பார்த்து விட்டோம். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த திட்டத்தை இறுதி செய்து உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 என்ற காங்கிரஸ் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என்று அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, வறுமையை ஒழிப்பதை தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறதே தவிர இதுவரையில் அதற்காக ஒன்றும் செய்தது கிடையாது. இத்தகைய வானளாவிய உத்தரவாதங்களை காங்கிரஸ் அறிவிக்க உரிமையற்றதாகிறது. இப்போது காங்கிரஸ் அறிவித்து இருக்கும் ரூ.72,000 அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலையாகும். ஆட்சியில் இருந்தபோது 2008-ல் விவசாயக் கடன் ரூ.72,000 கோடியைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். ஆனால் ரூ.52,000 கோடிதான் தள்ளுபடி செய்தனர். இதிலும், டெல்லி வர்த்தகர் ஒருவர் இதன் முக்கால்வாசிப் பயனை அடைந்ததாக இந்திய தலைமைத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவித்தது.

ராகுல் காந்தி அறிவித்ததை விட 1.5 மடங்கு அதிகமாக பிரதமர் மோடி அரசு ஏழைகளுக்கு சாதகம் செய்துள்ளது. ஆதார் மூலமான திட்டங்களை விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிதான் இப்போது, குறைந்தபட்ச ஏழைகள் வருவாய் திட்டத்தில் வங்கிகள் மூலம் பணம் அனுப்பப்படும் என்று கூறுகிறது என அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.