மாநில செய்திகள்

முதல் அமைச்சர் பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து + "||" + Chief Minister Palanisamy cancel his election campaign

முதல் அமைச்சர் பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து

முதல் அமைச்சர் பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து
உடல் நலக்குறைவு காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

இன்று காலை மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக  காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமியின் காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  முதல் அமைச்சர் பழனிசாமி மாலை பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தொண்டை வலியால் அவதிப்பட்ட முதல் அமைச்சர் பழனிசாமி, நேற்று நவீன மைக் பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டது கவனிக்கத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. உடல் நலக்குறைவு: அருண் ஜெட்லி மீண்டும் மந்திரி ஆகமாட்டார்
உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி மீண்டும் மந்திரி ஆகமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை