உலக செய்திகள்

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும் - இம்ரான்கான் + "||" + Imran Khan: Indo-Pak relations to remain tense till elections in India

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும் - இம்ரான்கான்

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும் - இம்ரான்கான்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதற்றமாகவே இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
கராச்சி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியானதை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதாக அந்நாட்டின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இன்னும் ஆபத்து நீங்கவில்லை என்றும், இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதற்றம் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் எந்த அத்துமீறலையும் தடுக்க ஏற்கனவே தயார் நிலையில் தாங்கள் இருப்பதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.