உலக செய்திகள்

ஈகுவடார் நாட்டில் கனமழைக்கு 20 பேர் பலி + "||" + Heavy rains lash Ecuador; 20 killed, 47 injured

ஈகுவடார் நாட்டில் கனமழைக்கு 20 பேர் பலி

ஈகுவடார் நாட்டில் கனமழைக்கு 20 பேர் பலி
ஈகுவடார் நாட்டில் பெய்த கனமழைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.
குவிட்டோ,

ஈகுவடார் நாட்டில் கனமழை பெய்து வருகிறது.  இந்த கனமழைக்கு இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர்.  47 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் செயலாளர் அலெக்சாண்டிரா ஆக்கிள்ஸ் கூறும்பொழுது, இந்த மழையால் 30 ஆயிரம்  பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.  நாடு முழுவதும் 7,700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் துணை அதிபர் ஓட்டோ சோனென்ஹால்ஜ்னெர், அடுத்த 3 அல்லது 4 வாரங்களுக்கு மழை தொடரும் என குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் 17 நகரங்களில் வெள்ளம் - 7 பேர் பலி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழையால், 17 நகரங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாயினர்.
2. கேரள வெள்ளம்; பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு
கேரள வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வடைந்து உள்ளது.
3. வேலூரில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை
வேலூரில் 3வது நாளாக தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருகிறது.
4. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
5. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.