உலக செய்திகள்

வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து -19 பேர் உயிரிழப்பு + "||" + 17 killed in Bangladesh fire tragedy rescue operations on

வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து -19 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து -19 பேர் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 19 பேர் உயிரிழந்தனர்.
டாக்காவின் பானானி பகுதியில் 22 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் பல்வேறு துணிக்கடைகள், இணைய சேவை மையங்கள் செயல்பட்டுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த இரண்டு கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. 8-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11-வது மாடி வரையில் சென்றுள்ளது. அந்நாட்டு தீயணைப்பு படைகள், ராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டது. தீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டிடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ அணைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடக்கிறது என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டேரியில் செருப்பு கம்பெனியில் தீ விபத்து
ஓட்டேரியில் மின்கசிவு காரணமாக செருப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
2. சாயப்பட்டறை குடோனில் தீ விபத்து; பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து நாசம் - கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அவதி
சாயப்பட்டறை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து நாசம் அடைந்தது. அந்த பகுதியில் கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
3. புழலில் இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம்
புழலில் உள்ள இரும்புக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
4. புனே அருகே துணிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி
புனேவில் ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த குடோவுனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
5. அரவக்குறிச்சி அருகே பரபரப்பு, நோயாளியை ஏற்றிச்சென்றபோது தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
அரவக்குறிச்சி அருகே நோயாளியை ஏற்றிச்சென்றபோது ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.