மாநில செய்திகள்

வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Income Tax Department They want to scare DMK MK Stalin speech

வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு

வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
தோல்வியின் விளிம்பில் இருப்பதால் தான் வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் என ஓசூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஓசூர்,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஓசூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓசூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நடைபெறக்கூடிய தேர்தல் மோடியின் பாசிச ஆட்சியை அப்புறப்படுத்த நடக்க கூடிய தேர்தல் ஆகும். தமிழ்நாட்டில் அக்கிரம, அநியாய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த தேர்தல் ஏதோ ஆட்சி மாற்றத்திற்காக நடக்கிற தேர்தல் என்று நீங்கள் எண்ணி விடக்கூடாது. இந்த தேர்தலின் மூலம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றியை வாக்காளர்களாகிய நீங்கள் தேடி தர உள்ளர்கள். மத்தியில் பா.ஜனதா மோடி ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் நடக்கிறது. இவர்கள் 2 பேரும் தற்போது கூட்டணி வைத்துள்ளார்கள். ஒருவர் பிரதமர், மற்றொருவர் முதல்-அமைச்சர்.

இவர்கள் 2 பேரும் தங்களது ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கவில்லை. இவர்களால் திட்டங்களை கூறி ஓட்டு கேட்க முடியுமா? அவர்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால் நாம் அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சாதனைகள், திட்டங்களை கூறி ஓட்டு கேட்க கூடிய அருகதை, எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்துள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகளை, திட்டங்களை கூறி நாம் ஓட்டு கேட்கிறோம்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் யாரெல்லாம் ஓரங்கட்டப்பட்டார்களோ, யாருடைய பதவி எல்லாம் பறிக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சீட் கொடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் கே.பி.முனுசாமி, திருவண்ணாமலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தொட்டியம் சிவபதி போன்றவர்களை ஜெயலலிதா ஓரங்கட்டி வைத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அவர்களுக்கு சீட் கொடுத்துள்ளனர். இது ஜெயலலிதாவிற்கு செய்ய கூடிய துரோகம் ஆகும்.

அதே போல சட்டசபையில் தே.மு.தி.க.வுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என ஜெயலலிதா கூறினார். அந்த கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். மேலும் வன்முறையின் மறுபெயர் பா.ம.க. என்று ஜெயலலிதா கூறினார். அந்த கட்சியுடன் தற்போது அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

என்னை சந்தர்ப்பவாதி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். யார் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவமே எடப்பாடி பழனிசாமி தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில மந்திரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

நேற்றைய தினம் (அதாவது நேற்று முன்தினம் இரவு) தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அவரது மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரால் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. அவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் எதாவது எடுத்துள்ளார்களா? காரணம் கேட்டால் போலீஸ் தரப்பில் புகார் தெரிவித்ததாக தமிழக தேர்தல் கமிஷன் தரப்பில் இருந்து கூறுகிறார்கள்.

நான் புகார் கூறுகிறேன். பிரதமரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த தயாரா? கோடநாட்டில் கொலை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதாக சயன் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனை நடத்த அருகதை இருக்கிறதா? தோல்வியின் விளிம்பில் இருப்பதால் தான் இதை போல வருமான வரி சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த வித சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படவில்லை: வருமான வரித்துறை
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
2. நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
3. சென்னை அதிகாரி உள்பட மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
ஊழல், லஞ்ச வழக்குகள் காரணமாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறையின் சென்னை அதிகாரி உள்பட 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.