மாநில செய்திகள்

இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் -மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Some have created the image of a DMK opponent

இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் -மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் -மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

அரக்கோணம் சோளிங்கரில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.

பேருந்துகளுக்கு தீ வைப்பு, பாலங்களை தகர்த்தது என ராமதாஸின் பாமக மீது ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருந்தார். பாமகவை குற்றஞ்சாட்டி ஜெயலலலிதா பேசியது சட்டசபை அவைக்குறிப்பில் உள்ளது. பாமகவை வன்முறைக்கட்சி என சட்டசபையில் கூறியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

அதிமுக அரசின் முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தவர் அன்புமணி. முட்டை கொள்முதல், ஆவின் ஒப்பந்தங்கள், கல்வித்துறை நியமனம் என 18 ஊழல்களை முன்வைத்தவர் அன்புமணி.

வன்னியர்களின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

எதிர்க்கட்சிகளை மிரட்டவே வருமான வரித்துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். திமுகவின் பிரசார பணிகளை தடுக்கவே துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ தன் பெயருக்கான விளக்கத்தையும் அளித்து மு.க.ஸ்டாலின் பேச்சு
குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த கயவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த கயவர்களுக்கு வேலூர் தேர்தல் வெற்றிமூலம் பாடம் புகட்டுங்கள் என்று வேலூரில் நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் வாணியம்பாடி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்’ என்று வாணியம்பாடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. தி.மு.க.வுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.