உலக செய்திகள்

சீனா - அமெரிக்கா இடையே நான்கு வாரங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - டொனால்டு டிரம்ப் + "||" + Donald Trump claims Chinese trade deal is very close

சீனா - அமெரிக்கா இடையே நான்கு வாரங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - டொனால்டு டிரம்ப்

சீனா - அமெரிக்கா இடையே நான்கு வாரங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - டொனால்டு டிரம்ப்
சீனா - அமெரிக்கா இடையே நான்கு வாரங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாயமான வர்த்தகம் அல்ல. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர்வரை 4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு எடுத்திருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தது.

இந்நிலையில் அமெரிக்கா – சீனாவுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக போர் நடந்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சீன, அமெரிக்கப் பிரதிநிதிகள் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

சீனா- அமெரிக்கா இடையே நான்கு வாரங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட நாளில்  சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார்.

அமெரிக்கா -  சீனா உறவில் ஆரோக்கியமான, நிலையான வளர்ச்சியையே சீன அதிபர் ஜி ஜின்பிங்  நம்புவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.