உலக செய்திகள்

நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது + "||" + UK court rejects Vijay Mallya's plea against extradition order

நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது

நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது
இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறை செயலாளர் சஜித்ஜாவித்தும் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து விஜய் மல்லையா தரப்பில் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது. இது விஜய் மல்லையாவிற்கு பின்னடைவாகும். மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர பணியாற்றும் இந்திய அதிகாரிகளுக்கு நேர்மறையான நகர்வாகும்.

இருப்பினும், மல்லையா அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. விசாரணையில் தொய்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.
2. 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில் 37-வது தடவையாக ஓட்டு போட்டார்
இமாசலபிரதேசத்தை சேர்ந்த 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில், 37-வது தடவையாக ஓட்டு போட்டார்.
3. நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.
4. சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)
1987-ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
5. தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகள் என்ன? பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி கேள்வி: சீன மாநாட்டில் பரபரப்பு
தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரம் மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளை தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சீனாவில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.