தேசிய செய்திகள்

பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரம் வெளியீடு + "||" + Have irrefutable proof of Pakistan using F 16 Indian Air Force

பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரம் வெளியீடு

பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரம் வெளியீடு
பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது.

பிப்ரவரி 27-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகள் மோதலின் போது பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது. பயங்கரவாத நடவடிக்கைக்கு கொடுத்த விமானத்தை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியது. இதுதொடர்பாக இந்தியா அமெரிக்காவிடம் புகார் தெரிவித்தது. இதில் பயன்படுத்தக்கூடிய அம்ரான் ஏவுகணை சிதைவு பாகங்களையும் இந்திய விமானப்படை ஆதாராமாக வெளியிட்டது. 

மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எப். 16 விமானத்தை சுட்டுவீழ்த்தினார் என இந்திய விமானப்படை தெரிவித்தது. 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையொன்று அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் உள்ள விமானத்தை எண்ணியது, விமானத்தின் எண்ணிக்கை குறையவில்லை என தகவல் வெளியாகியது. பாகிஸ்தான் தரப்பிலும் எப் 16 விமானம் பயன்படுத்தப்படவில்லை, சுட்டும் வீழ்த்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்திய விமானப்படை மார்சல் ஆஜிகே கபூர் பேசுகையில், இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானம், பாகிஸ்தானின் எப். 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் ஒரு எப் 16 விமானத்தை இழந்ததற்கான டேட்டா எங்களிடம் உள்ளது. சண்டையின் போது அபிநந்தன் சென்ற இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானமும் சிக்கியது என தெரிவித்துள்ளார். விமானப்படை எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் ரேடார் தகவல்களையும் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.
2. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
3. 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில் 37-வது தடவையாக ஓட்டு போட்டார்
இமாசலபிரதேசத்தை சேர்ந்த 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில், 37-வது தடவையாக ஓட்டு போட்டார்.
4. நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.
5. சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)
1987-ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.