தேசிய செய்திகள்

அசாம் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் + "||" + Assam Man Attacked by Mob For Selling Beef Forced to Eat Pork

அசாம் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல்

அசாம் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல்
அசாமில் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கவுகாத்தி அருகே உள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியல் பல ஆண்டுகளாக பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது68) என்ற முதியவர் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு சமைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வாரச்சந்தைக்குள் புகுந்த ஒரு கும்பல் திடீரென சவுகத் அலியை கடைக்குள் இருந்து இழுத்துவந்து அடித்து உதைத்துள்ளனர். கொடூரமாக தாக்கிய கும்பல் சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் கண்டனங்களுடன் வைரலாக பரவிவருகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ள போலீஸ், இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சவுகத் அலியை கும்பல் தாக்கும்போது வங்காளதேசியா? என்ஆர்சி சான்றிதழ் பெற்றுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகிறது.

இங்கு 40 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வரும் நாங்கள் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்து வருகிறோம். இதுபோன்ற பிரச்சனையை எதிர்க்கொண்டது கிடையாது. யாரும் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்ய தடை செய்யவும் இல்லை. இப்போது இதுபோன்ற கொடூரம் நடந்துள்ளது. எங்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அளித்திருந்தால், நாங்கள் மாட்டிறைச்சி உணவு சமைக்காமல் இருந்திருப்போம். அல்லது சட்டப்படி நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். ஆனால் கொடூரமாக என்னுடைய சகோதரர் நடத்தப்பட்டுள்ளார் என சவுகத் அலியின் சகோதரர் முகமது சஹாபுதீன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் இரு பிரிவினர் இடையே மோதல்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் வெள்ளிக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
2. 11 மணி நிலவரம்: அசாம்-26.39, சத்தீஷ்கர்- 26.2 சதவீத வாக்குகள் பதிவு
11 மணி நிலவரப்படி அசாமில் 26.39 சதவீத வாக்குகளும், சத்தீஷ்கரில் 26.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
3. மாட்டிறைச்சி உணவு விற்பனை: இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது
அசாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கனமழை, இடியை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்!
கனமழை, இடியை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
5. அசாமில் 5 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்
அசாமில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 5 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.