தேசிய செய்திகள்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு + "||" + Cong trying to promote terrorism Adityanath

பயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்கிறது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
உ.பி.யில் பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், தேச துரோகம் தொடர்பான ஷரத்தை நீக்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவில் வளங்கள் மீது இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறியிருந்தார். 

இப்படிக் கூறுவதன் மூலம் இந்திய நாட்டு மக்களை அவமதிப்பு செய்தார். மக்களை இந்து மற்றும் இஸ்லாமியர் என பிரிக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிப் பேசும், அவர்களை பொறுத்தவரையில் கட்சியின் வளர்ச்சிதான் முக்கியமாகும். இந்தியாவை பிளவுப் படுத்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் காங்கிரஸ் கொண்டிருக்கும் உறவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றார். 

சமாஜ்வாடி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்த யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த போது பெண்கள் பாதுகாப்பாக இருந்ததில்லை. குடும்பத்தை கட்டுப்படுத்த முடியாத நபரால் (முலாயம் சிங் யாதவ்) உங்களுக்காக எப்படி இருக்க முடியும்? என கேள்வியை எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் வெறிச்செயல்
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து காரசார விவாதத்தின் போது பா.ஜனதா தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. நடிகை ரம்யா மீது பா.ஜனதா பெண் நிர்வாகி சாடல் ’குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் நடிகை ரம்யா மீது பா.ஜனதா மகளிர் அமைப்பின் துணை தலைவி டுவிட்டரில் சாடியுள்ளார். அதாவது, குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
3. ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க காங்.காரிய கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு என தகவல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
4. தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ் விளக்கம்
தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
5. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம்
புதுவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம் நடத்தினார்கள்.