உலக செய்திகள்

செவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை-விஞ்ஞானிகள் அதிர்ச்சி! + "||" + Mars MYSTERY: Scientists shocked as methane found by NASA rover DISAPPEARS from Red Planet

செவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை-விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

செவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை-விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
செவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை என்பதை விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து உள்ளனர்.
கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் பல விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் விருப்ப கிரகமாக இருப்பது செவ்வாய். முக்கியமாக, மனித செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக உயிர் வாழ்க்கைக்கான சூழலியலை நம் பூமியானது வேகமாக இழந்துவருகிறது. அதனால், மனிதனின் அடுத்த புகலிடமாக இருக்கப்போவது விண்வெளியில் உள்ள நிலவுகள் அல்லது கிரகங்களில் ஒன்றா அல்லது செவ்வாய் கிரகமா என்ற விவாதங்களும், கணிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற விவாதங்களுக்கும் கணிப்புகளுக்கும் வலுசேர்க்க, நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி (Curiosity rover) என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

மிகவும் சுவாரசியமாக, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு, செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன்மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது  என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி (carbon) மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் முக்கியமாக, கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில், தற்போது, செவ்வாய் கிரகம் குறித்த மேலும் இரண்டு முக்கியமான உண்மைகளைக் கண்டறிந்து அசத்தியுள்ளது கியூரியாசிட்டி. நாசாவின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய ஆய்வுகள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த அறிவியல் தகவல்கள் Science எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் சமீபத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் வாயுவின் அளவில் பருவகால மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன? என்பது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் மூலமான மீத்தேன் வாயு பூமியிலுள்ள உயிரியல் அமைப்புகள் பலவற்றாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் வாயு அங்கு உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியாக இருக்க வேண்டும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கருதினார்கள்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மீத்தேன் வாயு இருப்பதை கியூரியாசிட்டி முதன்முதலில் கடந்த 2015-ம் ஆண்டு கண்டுபிடித்தது. ஆனால் அப்போது அது எங்கிருந்து உற்பத்தி ஆகிறது என்று கண்டறியப்படவில்லை.  அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் இறுதியில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் வாயுவானது வருடம் முழுக்க அளவில் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மாற்றத்துக்கான காரணங்களைக் கண்டறிய கியூரியாசிட்டியால் சுமார் நான்கு வருடங்களாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் நாசாவின் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரக மேற்பரப்பிலுள்ள, மீத்தேன் கிளாத்ரேட்ஸ் (methane clathrates) என்று அழைக்கப்படும் உறைந்த பனிக்கட்டிகளில் இருந்துதான் மீத்தேன் வாயு வெளியாகிறது என்று கண்டறியப்பட்டது.

ஆக, செவ்வாய் கிரக கோடைக் காலத்தில் அங்குள்ள பனிக்கட்டிகள் உருகும்போது அவற்றிலுள்ள மீத்தேன் வாயு வெளியாகி, அதன் அளவுகள் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பனிக்கட்டிகளில் பல நூற்றாண்டுகளாக உறைந்து இருந்த மீத்தேன் அங்கு வாழ்ந்திருக்கக் கூடிய உயிர்களால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் நாசாவின் ஆய்வாளர்கள்.

செவ்வாய் கிரகத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக வாயுவைக் கண்டறிய விஞ்ஞானிகள் டிரேஸ் எரிவாயு சுற்றுப்பாதையை (TGO) பயன்படுத்த முயற்சித்தார்கள். செவ்வாய் மீது சுதந்திரமாக  மிதந்த இந்த  சாதனத்தால்  மீத்தேனை  கண்டுபிடிக்கமுடியவில்லை. செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா என்பதை அறிய, மீத்தேன் முக்கிய காரணியாக இருக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூமியில் உயிரினங்களால் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால்  செவ்வாயில் வாயு இருந்தால்  ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்திருக்கலாம் என வாதிடுகிறார்கள். பூமியில், வளிமண்டல மீத்தேன் பசுமை இல்ல வாயு ஆகும், இது பெரும்பாலும் பசுக்கள் மற்றும் ஆடு போன்ற பண்ணை விலங்குகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 20 சதவீத வாயு மண் மற்றும் ஆலை உமிழ்வு மூலம் கணக்கிடப்படுகிறது.

இரசாயன பகுப்பாய்வு கருவி (TGO) தலைவர் டாக்டர் மானீஷ் படேல், கூறும் போது, நாங்கள் செய்த அளவீடுகள் மிகவும் ஆச்சரியமானவை.

ESA (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் மீத்தேன் இருக்கிறதா என நிலத்தடி தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டது.  செவ்வாய் கிரகம்  தொடர்ந்து நம்மை குழப்புகிறது. "எப்போதும் போலவே, செவ்வாய் கிரகத்தை மற்றொரு  ஆய்வு மூலம் மர்மத்தை விளக்க முடியும் என கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதாக, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆய்வு 2004 இல் முதன்முதலாக கண்டுபிடித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. இறந்த பிறகும் மனித உடல் உறுப்புகள் ஒரு வருடம் அசையும் தன்மை கொண்டவை : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இறந்த பிறகும் மனித உடல்கள் ஒரு வருடம் அசையும் தன்மை கொண்டவை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
2. முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு
மனிதர்கள் வாழும் பூமி போன்ற வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு எக்ஸோபிளானட்டின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
3. உறுப்பு மாற்று சிகிச்சை: மனித-விலங்கு கலப்பின கருவை உருவாக்க விஞ்ஞானிகள் திட்டம்
உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு மனித-விலங்கு கலப்பின கருவை உருவாக்க ஜப்பான் ஆய்வாளர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
4. முன்பு நினைத்ததை விட சந்திரன் மிகவும் பழமையானது: ஆய்வில் தகவல்
முன்பு நினைத்ததை விட சந்திரன் மிகவும் பழமையானது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
5. நட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்
பிடிஎஸ் 70 நட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்து உள்ளனர்.