உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி வெளியே துப்பாக்கி சூடு; பலர் காயம் + "||" + 'Multiple' victims in Australia shooting: Police

ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி வெளியே துப்பாக்கி சூடு; பலர் காயம்

ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி வெளியே துப்பாக்கி சூடு; பலர் காயம்
ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் சேப்பல் தெரு மற்றும் மால்வெர்ன் சாலை அருகே இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது.

இந்நிலையில், விடுதிக்கு வெளியே அதிகாலை 3.20 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர்.  உள்ளூர் ஊடகங்கள் 3 அல்லது 4 பேர் காயம் அடைந்திருக்க கூடும் என தெரிவிக்கின்றது.  எனினும் விக்டோரியா போலீசார் விரிவான விவரங்களை வெளியிடவில்லை.  இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.

ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக அரிது.  கடந்த 1996ம் ஆண்டு தாஸ்மானியாவில் 35 பேர் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்பின் கடந்த வருடம் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்தில் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
2. மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 10 பேர் காயம்
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.
3. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
4. மேற்கு வங்காளத்தில் 2 பா.ஜ.க. தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம்
மேற்கு வங்காளத்தில் 2 பா.ஜ.க. தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர்.
5. குத்தாலம் அருகே பயங்கரம் பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம், 2 பேரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட நிலக்கோட்டை போலீஸ்காரர் கைது
பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த நிலக்கோட்டை போலீஸ்காரர், 2 பேரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-