தேசிய செய்திகள்

ஜாலியன்வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினம்: நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி + "||" + Jallianwalabag massacre centenary day: Rahul Gandhi tribute to the shrine

ஜாலியன்வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினம்: நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி

ஜாலியன்வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினம்: நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி
ஜாலியன்வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந் தேதி பைசாகி திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசின் ராணுவம் அந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

ஜாலியன்வாலாபாக்கின் படுகொலை நூற்றாண்டு நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை ஜாலியன்வாலாபாக்கில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். பஞ்சாப் மாநில முதல்–மந்திரி அம்ரிந்தர்சிங், மந்திரி நவ்ஜோத்சிங் சித்து உள்பட பல தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் மாலையே அமிர்தசரஸ் வந்த ராகுல் காந்தி, அம்ரிந்தர்சிங்குடன் பொற்கோவிலுக்கு சென்று மரியாதை செலுத்தினார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவுதினத்தையொட்டி நேற்று பஞ்சாப் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. முதல்–மந்திரி அம்ரிந்தர்சிங், கவர்னர் வி.பி.சிங் பட்னோர் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் டோமினிக் அஸ்குயித் ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், ‘‘100 வருடங்கள் முன்பு இதே நாளில் ஜாலியன்வாலாபாக்கில் நடைபெற்ற சம்பவங்கள் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசின் வெட்ககரமான செயலை பிரதிபலிக்கிறது. நடந்த சம்பவங்களுக்காகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நாங்கள் ஆழமான வருத்தத்தை தெரிவிக்கிறோம்’’ என்று அவர் எழுதினார்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், ‘‘இன்று நாம் வரலாற்று நிகழ்வான ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுதினத்தை கடைப்பிடிக்கிறோம். இதில் கொல்லப்பட்ட தியாகிகள் அனைவருக்கும் இந்தியா அஞ்சலி செலுத்துகிறது. அவர்களது வீரமும், தியாகமும் மறக்க முடியாதது. அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு வலிமையான இந்தியாவை கட்டமைக்க மேலும் கடுமையாக பணியாற்ற அவர்களது நினைவு நம்மை ஊக்குவிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் காங்.தலைவர் கைது : ராகுல் காந்தி கண்டனம்
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் -ராகுல் காந்தி
எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. “நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா?” - ராகுல் காந்திக்கு காஷ்மீர் கவர்னர் சவால்
காஷ்மீரில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறும் ராகுல் காந்தி, காஷ்மீருக்கு நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா? என்று அந்தமாநில கவர்னர் சவால் விடுத்துள்ளார்.
4. கேரள வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளில் உதவுமாறு வலியுறுத்தினார்.
5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங். கட்சியினர் உதவ வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.