தேசிய செய்திகள்

சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு: கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம் + "||" + The case against Sabarimala fighters: Hindu organization agitates before the Kerala assembly

சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு: கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம்

சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு: கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம்
சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
திருவனந்தபுரம்,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததற்கு எதிராக கேரளா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டங்கள் நடந்தன. ‘சபரிமலை கர்ம சமிதி’ என்ற அமைப்பின் கீழ் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தின. இந்த போராட்டங்களில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களில் பலர் ஜாமீனில் வெளி வந்தனர்.

இவ்வாறு சபரிமலை விவகாரத்தில் போராடியவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்வதாக சபரிமலை கர்ம சமிதி குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து நேற்று அந்த அமைப்பினர் நாம ஜெப போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள மாநில சட்டசபை முன் நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று அய்யப்ப சரண கோ‌ஷங்களை எழுப்பினர்.

கேரளாவில் வருகிற 23–ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசுக்கு எதிராக சபரிமலை போராட்டக்குழுவினர் நாம ஜெப போராட்டத்தை நடத்தியது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்
ஹாங்காங்கில் நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று 17 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
2. கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி அறிவிக்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி போராட்டம்
கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி அறிவிக்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் வருகிற 27-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரம்பலூரில் தெரிவித்தார்.
3. நாற்றுநடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள் - தொளசம்பட்டி அருகே பரபரப்பு
தொளசம்பட்டி அருகே ரெயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி சுரங்க பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில், பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பணி பாதுகாப்பு வழங்கக்கோரி, டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
பெருநாவலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.