தேசிய செய்திகள்

வேறொரு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை + "||" + Woman forced to carry husband on shoulders as punishment for marrying man of another caste in MP

வேறொரு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை

வேறொரு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை
மத்திய பிரதேசத்தில் வேறொரு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் புரிந்ததற்காக இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
ஜபுவா,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஜபுவா மாவட்டத்தில் தேவிகார் பகுதியில் 20 வயது கொண்ட இளம்பெண் ஒருவர் வேறொரு சாதியை சேர்ந்த நபரை காதலித்துள்ளார்.  அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

இந்த விவரம் தெரிய வந்ததும் பெண்ணின் சமூகத்தினர் வினோத தண்டனையை வழங்கி உள்ளனர்.  தனது கணவரை தோளில் சுமந்தபடி தூக்கி கொண்டு நீண்ட தொலைவுக்கு அந்த பெண்ணை நடந்து செல்லும்படி அவரது சமூகத்தினர் வற்புறுத்தி உள்ளனர்.

அந்த பெண்ணை ஆண்கள் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து நடப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றனர்.  ஓய்வுக்காக அவர் நிற்கும்பொழுது சுற்றி இருப்பவர்கள் கேலி செய்ததுடன், பெண்ணை நடக்கும்படி கூறி கூச்சலிட்டு உள்ளனர்.  இதனால் உதவியற்ற நிலையில் அந்த பெண் தொடர்ந்து நடந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளது.  இதனை அடுத்து போலீசார் ஐ.பி.சி.யின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கொன்றை பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளி கைது
பரங்கிப்பேட்டை அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
2. மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு, திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் - 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ மூலம் சிக்கினார்
மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ செயலி மூலம் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. நடிகை விஷ்ணுபிரியா திருமணம்
கேரளாவில் நடிகை விஷ்ணுபிரியா திருமணம் நடைபெற்றது.
4. தோகைமலை அருகே காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் மீட்பு
தோகைமலை அருகே காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.
5. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அட்சதை தூவி வாழ்த்திய பொதுமக்கள்
மழை வேண்டி தவளைகளுக்கு நடந்த திருமணத்தில், அட்சதை தூவி பொதுமக்கள் வாழ்த்தினர்.