மாநில செய்திகள்

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது; 22 சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்: முதல் அமைச்சர் பேச்சு + "||" + Stalin's dream not to be fulfilled; AIADMK will win in 22 Assembly seats: CM Speech

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது; 22 சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்: முதல் அமைச்சர் பேச்சு

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது; 22 சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்:  முதல் அமைச்சர் பேச்சு
ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்றும் 22 சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம்,

சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதற்காக தொழிலாளர் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி உள்ளோம்.  தமிழகத்தில் ராணுவ தளவாட உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரவிருக்கிறது.

அ.தி.மு.க. அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு.  ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.

கோதாவரி மற்றும் காவிரி நதிநீர் திட்டத்தினால் சேலம் மாவட்டம் செழிக்கும்.  இந்த தேர்தலுக்கு பின்பே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு தொடங்கும்.  மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் கனவு நிறைவேறாது.  வருகிற 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க. ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை; துணை முதல் அமைச்சர் பேட்டி
மு.க. ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க நீலகிரிக்கு வரவில்லை என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
2. வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை; மு.க. ஸ்டாலின் அறிக்கை
வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை என மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
3. காயிதே மில்லத் 124வது பிறந்த நாள்; நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
காயிதே மில்லத் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
4. 14 வயதில் அரசியலுக்கு வந்த நாள் முதல் மக்களோடு மக்களாக இருக்கிறேன்; மு.க. ஸ்டாலின் பிரசாரம்
14 வயதில் அரசியலுக்கு வந்த நாள் முதல் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
5. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 20ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.