தேசிய செய்திகள்

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்; நக்சலைட்டுகள் பாதித்த பகுதியை சேர்ந்த பெண் 12வது இடம் + "||" + Woman From Naxal-Hit Dantewada Gets 12th Rank In Civil Services Exam

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்; நக்சலைட்டுகள் பாதித்த பகுதியை சேர்ந்த பெண் 12வது இடம்

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்; நக்சலைட்டுகள் பாதித்த பகுதியை சேர்ந்த பெண் 12வது இடம்
நக்சலைட்டுகள் பாதித்த சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவில் சர்வீசஸ் தேர்வில் 12வது இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு 2018ற்கான முடிவுகள் கடந்த 5ந்தேதி வெளியானது.  இதில் கனிஷக் கட்டாரியா என்பவர் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்காரின் தன்டேவாடா மாவட்டத்தின் கீடம் நகரை சேர்ந்த இளம்பெண் நம்ரதா ஜெயின் (வயது 25) என்பவர் 12வது இடம் பிடித்துள்ளார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் 99வது இடம் பெற்றவர்.  இவரது தந்தை உள்ளூரிலேயே தொழிலதிபராக உள்ளார்.  தாயார் வீட்டு பணிகளை கவனித்து கொள்கிறார்.  இவரின் சகோதரர் பட்டய கணக்காளராக வர விரும்புகிறார்.

தனது 10ம் வகுப்பு வரை தன்டேவாடா பகுதியில் படித்த நம்ரதா, பிலாய் நகருக்கு சென்று பொறியியல் பட்ட படிப்பு படித்துள்ளார்.  இந்த முறை ஐ.ஏ.எஸ். பணியை பெற்று விடும் நம்பிக்கையில் உள்ளார்.

இந்த வெற்றி பற்றி அவர் கூறும்பொழுது, ஆட்சியராக வரவே எப்பொழுதும் நான் விரும்பினேன்.  நான் வசிக்கும் பகுதி நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி.  இங்குள்ள மக்கள் கல்வி போன்ற அடிப்படை வசதியின்றி உள்ளனர்.  எனது மாநில மக்களுக்காக சேவையாற்ற நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் விபத்துக்கு முன்பே கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தலைமை நீதிபதிக்கு கடிதம்
உன்னா கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட இளம்பெண், கார் விபத்துக்கு முன்பே கொலை மிரட்டல்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தெரியவந்துள்ளது.
2. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.
3. போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டை : 1 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு
கட்சிரோலியில் நேற்று போலீசார் மற்றும் நக்சலைட்டுகள் இடையே 1 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4. மகாராஷ்டிராவில் 39 வருடங்களில் நக்சல் தாக்குதலில் 224 வீரர்கள், பொதுமக்களில் 571 பேர் சுட்டு கொலை
மகாராஷ்டிராவில் கடந்த 1980ம் ஆண்டில் இருந்து 224 பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களில் 571 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டு உள்ளனர்.
5. சாலைகள், பாலங்கள் கட்டுமான பணிகளை நிறுத்துங்கள்; மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் போலீசார் உள்பட 16 பேர் கொல்லப்பட்ட நிலையில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதனை நிறுத்த வேண்டுமென நக்சலைட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.