மாநில செய்திகள்

சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார் + "||" + DMDK Chief Vijayakanth Will Campaign In Chennai

சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார்

சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார்
சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார் என தேமுதிக அறிவித்துள்ளது.
2019 தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே தேமுதிக வெளியிட்ட வீடியோவில், பிரசாரத்திற்கு வருவேன் என்று விஜயகாந்த் பேசியிருந்தார். இப்போது அவர் சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் நாளை (15.04.2019) மாலை 4 மணிக்கு மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் - முதலமைச்சர் பழனிசாமி
துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
2. “விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்களே” மகன் விஜயபிரபாகரன் கண்ணீர்சிந்தி அழுதபடி பேசியதால் பரபரப்பு
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்களே என ஆம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது மகன் விஜயபிரபாகரன் கண்ணீர் சிந்தி அழுதபடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. விஜயகாந்த் 67-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
4. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
5. குடிநீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.