தேசிய செய்திகள்

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + Congress complains to EC over ‘suspicious black trunk’ in PM Modis helicopter

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த வாரம் கர்நாடகாவில் பிரசாரம் செய்ய வந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு நிறப்பெட்டி ஒன்று இறக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியானது. ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்படும் பெட்டி காரில் ஏற்றப்படுகிறது. பெட்டி ஏற்றப்பட்ட கார் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம்பெறாத கார் என கூறப்படுகிறது. இப்போது பெட்டியில் இருந்தது என்ன? கார் யாருடையது? என்ற கேள்வியை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில், பெட்டியில் இருந்தது என்ன என்பது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். என்ன பொருட்கள் இருந்தது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். பிரதமர் மோடிக்காக மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் வந்துள்ளது. அதிலிருந்து இறக்கப்பட்ட பெட்டி வைக்கப்பட்ட கார், மோடியின் பாதுகாப்பு வாகன வரிசையிலும் இடம்பெறவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு முகம்மது நஷீத் வாழ்த்து
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள்
கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் என்று காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - இன்று பத்ரிநாத் செல்கிறார்
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் இன்று பத்ரிநாத் செல்ல உள்ளார்.
4. நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம்
நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
5. பிரக்யாசிங்கை மன்னிக்கவே மாட்டேன் - பிரதமர் மோடி
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.