சினிமா செய்திகள்

என்னை அரசியலுக்கு இழுத்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ் + "||" + Do not drag me to politics - Raghava Lawrence

என்னை அரசியலுக்கு இழுத்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்

என்னை அரசியலுக்கு இழுத்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
என்னை அரசியலுக்கு இழுத்துவிடாதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அவரது கட்சி தொண்டர்கள் குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார் அதில்,

நடனம், டைரக்‌ஷன், படத்தாயாரிப்பில் ஜீரோவாக இருந்த நான் பின்பு அதை கற்றுக்கொண்டு ஹீரோ ஆனேன்.   ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். தன்னை பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள். நான் சேவையை அதிகமாக செய்வேன்.  நான் என்னென்ன நன்மைகள் செய்தேன் என பட்டியலிட்டால் உங்களால் பதில் சொல்ல முடியாது.  நாம் இருவரும் பொது விவாத மேடையில் அமர்ந்து விவாதம் நடத்தலாமா என சீமானுக்கு லாரன்ஸ் சவால் விடுத்துள்ளார்.