மாநில செய்திகள்

‘அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் + "||" + Vote for the Alliance "Dr. Ramadoss's request

‘அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

‘அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
தமிழக மக்கள் தலைநிமிர்ந்து கண்ணியமாக வாழ, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2019–ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை, ‘மாநிலங்களின் உரிமைகளே... மத்திய அரசின் பெருமை’ என்ற முழக்கத்துடன் பா.ம.க. எதிர்கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், கம்பீரமாகவும் வாழ முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த கவுரவத்தை மீட்டுக் கொடுப்பது பா.ம.க.வின் நோக்கமாகும்.

காவிரி உரிமை, கல்வி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் தி.மு.க. ஆட்சியில் தான் தாரைவார்க்கப்பட்டன. இவை அனைத்தும் மீட்கப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவற்றைப் போலவே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமையை வென்றெடுக்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு... 

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்குரிய பங்கை முழுமையாக பெற்றால் மட்டும் தான் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும் என்று பா.ம.க. உறுதியாக நம்புகிறது.

வேலைவாய்ப்புகளைப் போலவே ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பாடுபடுவோம் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

தமிழக மக்கள் தலைநிமிர்ந்து, கண்ணியமாக வாழ மத்தியில் தமிழகத்தின் உரிமைக்குரலை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அதனால், தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.