கிரிக்கெட்

டெல்லியின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் - டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + The Delhi team won by 39 runs

டெல்லியின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் - டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லியின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் - டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
ஐதராபாத், 

ஐதராபாத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும்  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 45 (40) ரன்கள், காலின் மன்ரோ 40 (24) ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய சயத் கலீல்அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், அபிஷேக் சர்மா மற்றும் ரஷீத் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 51 (47) ரன்கள், பேர்ஸ்டோ 41 (31) ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபடா 4 விக்கெட்டுகளும், கீமோ பால் மற்றும் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.