மாநில செய்திகள்

மலையாள மொழி பேசும் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி ‘விஷூ’ திருநாள் வாழ்த்து + "||" + Edappadi Palanisamy 'Vishu' wishes to congratulate the ceremony

மலையாள மொழி பேசும் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி ‘விஷூ’ திருநாள் வாழ்த்து

மலையாள மொழி பேசும் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி ‘விஷூ’ திருநாள் வாழ்த்து
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “விஷூ” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

மலையாள புத்தாண்டு தினமான “விஷூ” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “விஷூ” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தாண்டு தினமான “விஷூ” திருநாளன்று, மலையாள மொழி பேசும் மக்கள், அதிகாலை கண்விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷூக்கனி கண்டு, மலரும் இப்புத்தாண்டு தங்கள் வாழ்வில் குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று இறைவனைத் தொழுது, உற்றார் உறவினர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு, அறுசுவை விருந்துண்டு உற்சாகமாக “விஷூ” தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள்.

இப்புத்தாண்டு மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை மலையாள மொழிபேசும் மக்களுக்கு எனது இனிய “விஷூ” திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.