தேசிய செய்திகள்

இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி + "||" + BJP trying to divide India, says Mehbooba Mufti

இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி

இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி
நச்சு கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகதான், இந்த நாட்டை பிரிக்க விரும்புகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.
ஸ்ரீநகர்,
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு தனி பிரதமர் தேவை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு பேசினார். 

அப்துல்லா குடும்பத்தினரும், முப்தி குடும்பத்தினரும் ஜம்மு-காஷ்மீரை மூன்று தலைமுறைகளாக சீரழித்துவிட்டனர். அவர்கள் ஒன்று திரண்டு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தூற்றலாம். ஆனால், அவர்களால் இந்த நாட்டை பிரிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி பேசினார். 

அவரது இந்த கருத்தை விமர்சித்து, டுவிட்டரில் மெகபூபா முப்தி வெளியிட்ட பதிவில், முஸ்லிம்கள், சிறுபான்மையினரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்ற நச்சு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பாஜகதான் நாட்டை பிரிக்க விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய சட்டசபை தேர்தல்: பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி முறிவு பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை
மராட்டிய சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி உடைக்கக்கூடும் என சிவசேனா பாஜகவை எச்சரிக்கிறது.
2. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
3. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்
பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
5. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.