தேர்தல் செய்திகள்

காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும்: பியூஸ் கோயல் + "||" + Piyush Goyal says Congress ‘NYAY’ scheme recipe for scam, may burst like balloon

காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும்: பியூஸ் கோயல்

காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும்: பியூஸ் கோயல்
காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
புதுடெல்லி,

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தலா ரூ.72,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. நியாய் என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம் 5 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பியூஷ் கோயல், காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டம், ஊழலுக்குதான் வழிவகுக்கும் என்றார்.மேலும் அவர் கூறுகையில், “மக்களின் வருவாய், ஊதிய அளவுகள் தொடர்பான தரவுகள் எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸின் நியாய்திட்டம் செயல்படுத்த முடியாத வாக்குறுதி என்பதே எனது கருத்து. நாட்டின் பொருளாதாரம், நிதி சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகினால், இத்திட்டத்தை பேரிடர் என்றே கூறுவேன்.

இத்திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வில் முற்றிலும் ஊழல்தான் நிறைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் பிரபலமான ஊழல்களின் வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும்.நாட்டின் நிலையான வளர்ச்சிக்காக, பிரதமர் மோடியின் அரசு பணியாற்றி வருகிறது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பட்ஜெட்டுக்கு அனுமதி மறுத்த விவகாரம்: காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக நேற்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
2. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு
வருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
3. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
4. காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.
5. இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை, போக மாட்டேன் -வைகோ ஆவேசம்
இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை போக மாட்டேன் என வைகோ ஆவேசமாக கூறினார்.