மாநில செய்திகள்

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி பெற்ற மகனால் குத்திக்கொலை + "||" + in Chennai Former MP of AIADMK The wife Killing a son

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி பெற்ற மகனால் குத்திக்கொலை

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி பெற்ற மகனால் குத்திக்கொலை
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, பெற்ற மகனால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் அ.தி.மு.க. முன்னாள்  எம்.பி. குழந்தைவேலுவின் மனைவியாவார். சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைவேலு இறந்து விட்டதால் ரத்தினம் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது, ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சாஸ்திரிநகர் போலீசார் நடத்திய விசாரணையில், ரத்தினத்தின் மகன் பிரவீன் என்பவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருவது தெரியவந்தது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சினை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார். சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் தனது தாயைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தப்பி ஓடிய பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இது மகிழ்ச்சியான செய்தி... தமிழகத்தில் கோடைமழைக்கான அறிகுறிகள் தொடங்கி விட்டன- தமிழ்நாடு வெதர்மேன்
இது மகிழ்ச்சியான செய்தி... தமிழகத்தில் கோடைமழைக்கான அறிகுறிகள் தொடங்கி விட்டன என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் கூறி உள்ளார்.
2. சென்னையில் இந்த ஆண்டின் அதிகப்படியான வெப்பம் நேற்று பதிவானது
சென்னையில் இந்த ஆண்டின் அதிகப்படியான வெப்பம் நேற்று பதிவாகி உள்ளது.
3. சென்னையில் தே.மு.தி.க. பிரமுகர் படுகொலை
பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. சென்னை வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
சென்னை வக்பு வாரிய அலுவலகத்தில் 5 சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் .
5. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.