தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்: 3 நக்சல்கள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப். வீரர் பலி + "||" + 3 Naxals, CRPF jawan killed in Jharkhand encounter

ஜார்க்கண்ட்: 3 நக்சல்கள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப். வீரர் பலி

ஜார்க்கண்ட்: 3 நக்சல்கள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப். வீரர் பலி
ஜார்க்கண்ட்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் பலியானார்.
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் பெல்பா காட் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் மரணம் அடைந்தார்.

நக்சலைட்டுகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், பைப்வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்டில் 4 கட்டங்களாக  மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 7 வயது குழந்தை கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்தவன் 3 வயது சிறுமியை கொடூரமாக கொன்றான்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக்கொலை
ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
3. கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் உறுதி
கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் உறுதியாக கூறியுள்ளார்.
4. சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தலைவரை கடத்தி கொலை செய்த நக்சலைட்டுகள்
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளால் கடத்தி கொல்லப்பட்டார்.