கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு + "||" + Smith, Warner likely to miss final stages of IPL

ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு

ஐபிஎல் தொடரின்  கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு
ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக  கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்மித், வார்னர் ஆகியோரின் தடைக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, வரும் மே 30 ஆம்தேதி  துவங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இரு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 

உலக கோப்பையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கான பயிற்சி முகாம் வரும் மே 2 ஆம் தேதி துவங்குகிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்வது அவசியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகளில் இருவீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. 

இந்த பயிற்சி முகாமில், மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலிய லெவன் மற்றும் நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று பயிற்சி ஆட்டங்களும் ஆலன் பார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது.  ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்கள் அணிக்காக விளையடும் டேவிட் வார்னர் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

பிளே ஆப் சுற்றுகளுக்கு வார்னர், ஸ்மித் ஆகியோர் இடம் பெற்றிருந்த அணிகள் தகுதி பெறும் பட்சத்தில் இரு வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. அதேபோல், மும்பை அணிக்காக விளையாடி வரும் பெஹ்ரண்டார்ப் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோரும் உலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளதால், இந்த வீரர்களும் கடைசி கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெற்றி பெறவே உங்களுக்கு சம்பளம், விளையாடுவதற்கு இல்லை: கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் பற்றி விவரித்த ஸ்மித்
உண்மையில் பந்தை சேதப்படுத்த தூண்டியது யார்? என்பது குறித்து ஸ்மித் விளக்கம் அளித்துள்ளார்.
2. ‘பந்தை சேதப்படுத்த சொன்னது வார்னர் தான்’ - போட்டு உடைத்தார், பான்கிராப்ட்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தும்படி கூறியது டேவிட் வார்னர் தான் என்று பான்கிராப்ட் கூறியுள்ளார்.
3. ஐ.பி.எல். : விலை போகாத யுவராஜ், பிரெண்டன் மெக்கலம், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
ஐ.பி.எல். போட்டியில் விலை போகாத யுவராஜ், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். ஹனுமான் விகாரி ரூ.2 கோடி, கார்லோஸ் பிராட்வேட் ரூ.5 கோடி, சிம்ரான் ஹெட்மியர் ரூ.4.2 கோடி.
4. ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்
ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.