மாநில செய்திகள்

பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு + "||" + Nalini pleads for parole: The Supreme Court of India

பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனு மீது நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய நளினியின் மனு மீது, ஜூன் 11-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய மனுவுக்கு ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொடநாடு விவகார பேச்சு மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
கொடநாடு விவகார பேச்சு தொடர்பாக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் நளினி ‘ரிட்’ மனு தாக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் 7 பேர் தங்களது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.
3. 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது -சென்னை ஐகோர்ட்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
4. 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு
மக்களவை தேர்தலையொட்டி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
5. சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன விவகாரம்: 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு நோட்டீஸ்
சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு தொடர்பாக 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.