தேசிய செய்திகள்

மேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல் + "||" + BJP urges Election Commission to deploy central police forces

மேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல்

மேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் மத்திய படைகளை நிலைநிறுத்த வேண்டும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என பா.ஜனதா தலைவர் விஜய்வர்கியா வலியுறுத்தியுள்ளார். முதல்கட்ட தேர்தலின் போதே இக்கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். ஆனால் நடக்கவில்லை. 

மீதம் இருக்கும் 6 கட்ட தேர்தல்களில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது. 

வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று விஜய்வர்கியா கூறியுள்ளார்.