தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரம் செய்ய யோகிக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம் + "||" + Election Commission bans UP CM Yogi Adityanath

தேர்தல் பிரசாரம் செய்ய யோகிக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரம் செய்ய யோகிக்கு  தடை விதித்தது தேர்தல் ஆணையம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
யோகி ஆதித்யநாத்தும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் உ.பி.யில் மதத்தின் அடிப்படையில் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது. அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுத்துள்ளது.
 யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணியிலிருந்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது. மாயாவதி நாளை காலை 6 மணியிலிருந்து 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி வாக்கு, புல்லட் அல்ல - யோகி ஆதித்யநாத்
ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி வாக்கு தான் புல்லட் அல்ல என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
2. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் ; யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்
மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
4. கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு: யோகி ஆதித்யநாத்
கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
5. ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல்
ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் மராட்டியத்தில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.