கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு + "||" + India’s squad for the ICC CWC19

உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மும்பை 

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர்,

கூட்டத்திற்கு பின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் வீரர்கள் விவரத்தை அறிவித்தனர். 

வீரர்கள் விவரம் வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மகேந்திர சிங் டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்ந்திரா சாஹல், ஜஸ்பிரித்  பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

\

தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி
ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.
2. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது -பாகிஸ்தான் வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
3. தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்
தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் குழந்தையுடன் மரணம் அடைந்தார்.
4. பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்
பட்லரை ரன் அவுட் செய்த விவகாரத்தில் நான் விதிகளை மீறவில்லை என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளார்.
5. மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் - டோனி
போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறி உள்ளார்.