மாநில செய்திகள்

எம்.எல்.ஏ. விடுதியில் ரெய்டு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது + "||" + ED summons R B Udayakumar

எம்.எல்.ஏ. விடுதியில் ரெய்டு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது

எம்.எல்.ஏ. விடுதியில் ரெய்டு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது
எம்.எல்.ஏ. விடுதியில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். விடுதியில் உள்ள ‘சி’ பிளாக் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையாக நீண்ட நேரம் சோதனை நடந்தது.  எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பணம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. 
 
இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் சில துண்டு சீட்டுகள் மற்றும் வெற்றுப்பைகள் கைப்பற்றப்பட்டதாகவும், பாதுகாப்பில்  இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படவில்லை: வருமான வரித்துறை
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
2. நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
3. சென்னை அதிகாரி உள்பட மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
ஊழல், லஞ்ச வழக்குகள் காரணமாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறையின் சென்னை அதிகாரி உள்பட 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
4. வருமான வரித்துறை சோதனை நிறைவு: தேர்தலை ரத்து செய்ய சதி - தி.மு.க. வேட்பாளர் கனிமொழி
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. #Kanimozhi
5. வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
தோல்வியின் விளிம்பில் இருப்பதால் தான் வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் என ஓசூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.