தேசிய செய்திகள்

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை + "||" + EC bars Samajwadi Party leader Azam Khan from election campaigning for 72 hours

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
லக்னோ, 

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

அவருக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.  ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2. அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய மோடி, குடிமகனின் பயணம் என்ற வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உள்ளது.
4. தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5. மக்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
12 மாநிலங்களில் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கிறது