தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார் - ராகுல் காந்தி + "||" + Ready to give up 4-Seat Offer to AAP - Rahul Gandhi

ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார் - ராகுல் காந்தி

ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார் - ராகுல் காந்தி
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
புதுடெல்லி,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “ ஆம் ஆத்மிகட்சியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைப்பதற்கு பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை. எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது” என கூறியுள்ளார்.


டெல்லியை பொறுத்த வரையில் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது; மேலவையில் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் மேலவையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு எம்.எல்.ஏ.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ. விலகி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.
3. ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சி; மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களை தலா ரூ.10 கோடிக்கு விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு கூறியுள்ளார். #AamAadmiParty
4. ஆம் ஆத்மி கட்சி பசுவை அரசியலாக்குகிறது; தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பா.ஜ.க. முடிவு
ஆம் ஆத்மி கட்சி பசுவை அரசியலாக்குகிறது என பா.ஜ.க. இன்று குற்றச்சாட்டு கூறியுள்ளது.